Saturday, February 21, 2009

ஸ்ரீ ராம் சர்மாவின் டைரிக் குறிப்புகள்!

திருப்பூர்.
கண்ணதாசன் நடத்தும் 'தென்றல் திரை' பத்திரிகையில் தலைப்பு.
நேரு ஒரு முட்டாள்! அவர் தகப்பன் மோதிலால் ஒரு முட்டாள்!
பிரதமர் நேரு சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் நிருபர்கள், திராவிடநாடு கேட்கிறார்களே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க அதற்கு நான்சென்ஸ் என்று பதில் சொன்னார். தி.மு.க.வினர் 'அறிஞர் அண்ணாவை முட்டாள் என்று சொல்லிவிட்டார், லட்சக்கணக்கான தி.மு.க.வினருக்கு முட்டாள் பட்டமா! நேரு எங்கு வந்தாலும் கருப்புக்கொடி (Black Flag) காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைப் பற்றி தமிழக காங்கிரசார் , இது ஒரு சாதாரண வார்த்தை தான் சகஜமாக அனைவரும் பயன் படுத்துவது தான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்க்கு கண்ணதாசனின் reaction தான் மேலே சொன்ன தலைப்பு!

இதற்கு நான் ஒரு கார்டு வாங்கி 'தென்றல் திரை' பத்திரிகைக்கு எழுதினேன்.
நான்சென்ஸ் என்பதற்கு இந்த இடத்தில் 'முட்டாள் தனம்' என்று பொருள். நாம் செய்யும் ஒரு காரியம் அல்லது கொண்டிருக்கும் ஒரு கருத்து நமக்கு சரியாக இருக்கலாம், ஆனால் பிறருக்கு அது முட்டாள்தனமாகத் தெரியலாம்; இது ஒரு relative term அதாவது சார்பு நிலை வாதம். பார்க்கிறவர்களின் பார்வையை சார்ந்தது. அதற்காக இப்படி எழுதலாமா?
(வெற்றிநிலவன் குறிப்பு: பின்னாளில் கண்ணதாசன் இப்படி எழுதியதற்கு மன்னிப்பு கேட்டு வருந்தினார். )

Tuesday, February 17, 2009

ஸ்ரீ ராம் சர்மா!

இவைகள் ஸ்ரீ ராம் சர்மா-என்பவரால் எழுதப்பட்டவை. அவரது டைரி குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது.

1960- களில் நான் தஞ்சாவூரில் இருந்தேன். நான்கு சினிமா கொட்டகைகள் இருந்தன. நாலிலும் வெளியாகும் படம் பூராவும் பார்த்துவிடுவேன். அப்போது ரசிகர்கள் பற்றி நன்கு தெரிந்தது. பாசம் என்று ஒரு எம். ஜி.ஆர். படம். அதில் எம். ஜி. ஆர். அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து அழுவது போல ஒரு காட்சி வரும். அதில் எம்.ஜி.ஆர். வாயை 'ஆ' வென்று திறந்து இருப்பது போல் காட்டி பின்னணியில் எரிமலை வெடித்து சிதறுவது போல் காட்டியிருப்பார்கள். நான் கமென்ட் அடித்தேன். 'எம்.ஜி.ஆர். கொஞ்சம் இந்த இடத்தில் நடிக்க சோக நடிப்பு வரவில்லை போல இருக்கிறதே'. பக்கத்தில் இருட்டில் இருந்து ஒரு குரல் கேட்டது. 'டேஅய்; யாரடா அவன், தொப்பை தாத்தா கிழுச்சுடுவாநா; உதையடா அவனை' நைசாக நழுவி குனிந்து கொண்டே பாத் ரூம் பக்கம் பொய் வாயில் படி அருகில் இருந்தே மிச்ச படத்தை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டேன். அடுத்தது ஒரு சிவாஜி படம். குங்குமம் என்று நினைக்கிறேன். 'ரொம்ப ஓவரா இருக்குது இல்லையா' என்று வாய் தவறி சொல்லிவிட்டேன். 'டேய்; அட்டை கத்தி; ஜிகினா பாவடை ஆளுடா இவன். வெளியில் வரும்போது மடக்குங்கடா' என்றான் ஒருத்தன். எடுத்தேன் சவாரி. இன்றைய தினத்தில் இருந்து நான் யாருக்கும் ரசிகன் அதாவது fan கிடையாது. குறை கூறுவதும், விமரிசனம் செய்வதும் கமென்ட் அடிப்பதும் நம்முடைய உரிமை.